40 ஆண்டுகளின் பின்னர் யாழில் பனைப் பரம்பல் கணக்கெடுப்பு!

Tuesday, May 1st, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் 40 ஆண்டுகளின் பின்னர் பனைகளின் பரம்பல் தொடர்பான கணக்கெடுப்பு செய்மதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக பனைமரம் உள்ளது. போர் மற்றும் கட்டுமான வேலை போன்ற பல்வேறு காரணங்களினால் அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்தப் பனை மரங்களின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 35 இலட்சம் பனைகள் காணப்பட்டன. அந்த எண்ணிக்கையே காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இன்றுவரை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பனை அபிவிருத்திச் சபை, பனம் விதைகளை ஆண்டுதோறும் நட்டு வருகின்றது. இதுவரை அழிவடைந்த பனை மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டால் அதற்கு அளவான விதைகளை நடுவதன் மூலம் பனை மரங்களின் பரம்பலை எமது மாவட்டத்தில் தக்கவைத்துக் கொள்ளலாம்.

100 மரம் நடுகை செய்தால் 30 மரம் தப்பிப் பிழைத்து வளரும். பனை மரத்தின் தேவை எமக்கு அதிகமாக உள்ளது. நடப்பாண்டில் இந்தக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல், உயிரியல் துறை எம்முடன் இணைந்துள்ளன. கணக்கெடுப்பு செய்மதியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: