போராட்டத்திற்கு ஆதரவு இல்லை – தேசிய தொழிற்சங்க முன்னணி!

Friday, May 5th, 2017

நாட்டில் இன்று நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு எதுவித ஆதரவையும் வழங்கப் போவதில்லை என தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தமது முன்னணி சார்ந்த ஐம்பதிற்கு மேற்பட்ட அமைப்புக்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க மாட்டாதென அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமல்ல. மாறாக சமகால அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு பல சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க தேசிய தொழிற்சங்க முன்னணியால் முடிந்தது என திரு.ரத்னபிரிய குறிப்பிட்டார். தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் டி.எம்.பி.அபேரத்னவும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார். இன்றைய வேலைநிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதென அவர் கூறினார்.

மேலதிக மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹணவும் தமது அமைப்பும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க மாட்டாது என்றார்.

சுகாதார தொழில்துறை சார்ந்தோர் அமைப்பின் சார்பில் ரவி குமுதேஷ், ரயில்வே கூட்டு முன்னணியின் சார்பில் ராஜா கன்னங்கர ஆகியோர் உள்ளிட்ட பலரும் இங்கு கருத்து வெளியிட்டார்கள்.

Related posts: