தேர்தலை நடாத்தாவிட்டால் அரசியலமைப்பு குழுக்களிலிருந்து விலகுவோம் – மஹிந்த!

Monday, July 3rd, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் நடாத்தாது போனால் அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்புக்கு கூட்டு எதிர்க்கட்சியின் எந்தவொரு ஆதரவும் வழங்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளை மெதகமவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வெற்றிபெறும் என்பதையும் அரசாங்கம் தோல்வியடையும் என்பதையும் தெரிந்தே தேர்தலைப் பிற்போட்டு வருகின்றது.

நாளை கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதுடன் அரசியலமைப்புச் சபை உப குழுக்களிலிருந்து விலகுவதற்கும் தீர்மானம் எடுக்கப்படும்” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

உள்ளூராட்சி தேர்தலின் எதிரொலி: ஜனாதிபதி, பிரதமர் தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர கூட...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித...
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை - ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது - யாழ்.போதனா வைத்தியச...

உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்ப...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் சதொச ஊடாக இன்றுமுதல் 145 ரூபாவுக்கு அரிசி - வர்ததக அமைச்சு அறிவிப்பு!
கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்...