தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் பற்றி கல்வியமைச்சில் முறையிடலாம்!

Thursday, January 18th, 2018

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் குறித்து மாகாண கல்வியமைச்சில் முறையிடலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அநீதியான குளறுபடிகள் இடம்பெறுமாயின் முதல்கட்டமாக குறித்த பாடசாலையில் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது திருப்திகரமான பதில் வழங்கப்படாவிடின் கல்வியமைச்சு மற்றும் மாகாண கல்வியமைச்சில் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலைகளிலும் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் விசேட பிரிவின் உதவியை பெறவுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts: