தொடர் மழை – யாழ் மாநகர பகுதி மக்களின் நிலைமைகளை பார்வையிட முன்னாள் உதவி மேயர் றீகன்!

Saturday, November 4th, 2017

நாட்டின் பல பாகங்களிலும் வளிமண்டல தாழமுக்கம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் யாழ். மாநகருக்குட்பட்ட  j/81, j/84, j/85, j/88, ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்

கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த பகுதிகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர சபையின் முன்னாள் உதவி மேயர் றீகன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களது நிலைமைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும் குறித்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்ளுக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் தேங்கி நிற்பதால் தாள்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இருப்பிடங்களை விட்டு பொது இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாய்க்காலை புனரமைத்து தருமாறு நல்லூர் தெற்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ...
ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...