65 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் இரு துருவங்கள்!

Friday, April 27th, 2018

அணு ஆயுத சோதனைகளால் உலகை அச்சுறுத்தி வந்த வடகொரியா ஜனாதிபதி இன்று தென்கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகின்றன.

எனினும், வடகொரியா ஜனாதிபதிகள் எவரும் தென்கொரியா செல்லவில்லை. இந்தநிலையில் 2011ஆம் ஆண்டு வடகொரியா ஜனாதிபதி பதவியை ஏற்ற கிம் ஜோங் உன் இன்று வடகொரியாவிற்கு சென்றுள்ளார்.

அடுத்தடுத்து உலக நாடுகளின் எதிர்ப்பை அதிகளவில் சம்பாதித்துக்கொண்டார் வட கொரிய ஜனாதிபதி, உலக நாடுகள் விடுத்திருந்த எச்சரிக்கையை மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையை நடத்தியிருந்தார். இதுவரை 6 அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளார். இறுதியாக நடத்திய ஏவுகணை சோதனை, வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கக்கூடிய சக்தி பெற்றதாக இருந்தது.

இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சமரசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக கடந்த பெப்ரவரி மாதம் சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்து கொண்டனர்.

கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்கும் அரசு பிரதிநிதியாக தென் கொரியா சென்றார். அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து பேச வடகொரியா ஜனாதிபதி சம்மதித்தார்.

மே மாதம் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதற்கு முன் தென் கொரியாவில் இன்று நடக்கும் இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா ஜனாதிபதி ஒருவர் தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: