11 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

Tuesday, June 4th, 2019


நீண்ட 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு விமான சேவையை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தியது.

தற்போது மீண்டும் சேவையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ரம்ஜான் விடுமுறை வர உள்ள நிலையில், லண்டனிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு இந்த விமான சேவை தொடங்கியுள்ளது.

இஸ்லாமாபாத்தின் மரியாட் ஹொட்டலில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான சேவையை நிறுத்தியது.

இச்சம்பவத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 270 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: