பேஸ்புக் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு!

Wednesday, May 3rd, 2017

உலகின் முன்னி சமூக வலைத்தளமான பேஸ்புக், அதன் பாவனையில் அடிமையான இளைஞர்களை இலக்காக கொண்டு இயங்குவதாக வெளியாகிய குற்றச்சாட்டை குறித்த நிறுவனம் மறுத்துள்ளது.

இளைஞர்கள் எவ்வாறு தமது புகைப்படங்களை பதிவேற்றுகின்றார்கள், பிற பிரச்சினைகள் குறித்து எத்தகைய கருத்துக்களை பதிவிடுகின்றனர் என்பது குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று அண்மையில் வெளிவந்தது.குறித்த ஆய்வு அறிக்கையில், பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ஏனைய பதிவுகளை கண்காணிக்கும் திறனுடையது என்றும் இளைஞர்களை இலக்காக கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆய்வு அறிக்கையானது விளம்பரதாரர்களுடன் பகிரப்பட்டதாகவும், இது தவறான வழிநடத்தல் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலுள்ள மக்களை பேஸ்புக் இலக்காக கொள்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் “அவுஸ்ரேலிய ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த பகுப்பாய்வானது, பேஸ்புக்கில் மக்கள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை விளம்பரதாரர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக திட்டமிடப்பட்டது.

Related posts: