டீசல் கலப்படம் தொடர்பாக சுவிஸ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!

Friday, September 16th, 2016

ஆபிரிக்க நாடுகளில் கலப்படமடைந்த டீசல் என்று அழைக்கப்படும் டீசல் வர்த்தகத்தில் தொடர்புடையதாக, சுவிட்சர்லாந்து நிறுவனங்களை “பப்ளிக் ஐ” என்னும் பிரச்சார அமைப்பு விமர்சித்துள்ளது.

எட்டு ஆப்ரிக்க நாடுகளில் சேகரிக்கப்பட்ட டீசல் மாதிரிகளில், ஐரோப்பாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 300 மடங்கு கந்தகம் அதிகமாக இருந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அது ஆப்ரிக்க தேசிய அரசுகளால் விதிக்கப்பட்ட, சட்டரீதியான அளவிற்குள்ளாக இருந்தாலும், இந்த டீசல் புகை ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இரண்டு சுவிஸ் நிறுவனங்கள், இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் இந்த நாடுகளில் சட்டரீதியாக உள்ள அளவுகளில் பணிபுரியும் சில்லறை வணிகர்களுடன் மட்டுமே தாங்கள் சற்று விலகி நின்று பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.

solal_eclipse_351 copy

Related posts: