ஜனநாயக ஆதரவு மாணவர்களின் சிறை தண்டனை நீக்கம்!

Monday, August 15th, 2016

நியாயமற்றதாக இருக்கும் என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்ததால், ஹொங்கொங்கிலுள்ள ஜனநாயக ஆதரவு மாணவர்கள் மூன்று பேர் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வொங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா ஆகிய மூவரும், உண்மையில் சமூக அக்கறையினால் தூண்டப்பட்டு இதை செய்திருக்கின்றனர் என்ற வாதத்தை ஏற்றுகொள்வதாக  நீதிபதி  ஜூன் செயுங் கூறியிருக்கிறார்.

இந்த போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டு சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் இணைத்தும் கொண்டனர். ஜோசுவா வொங், நாதன் லா ஆகியோர் சமூகச் சேவை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். மூன்று வார சிறை தண்டனை பெற்றிருந்த அலெக்ஸ் சொவ்வின் தண்டனை நீக்கப்பட்டுள்ளது.

Related posts: