அமைச்சரவை விபரங்களை வெளியிட்ட சிம்பாபேயின் ஜனாதிபதி!

Sunday, December 3rd, 2017

சிம்பாபேயின் புதிய ஜனாதிபதி எமர்சன் நன்காக்வ (Emmerson Mnangagwa) தமது அமைச்சரவை விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவையின் முக்கிய பதவிகளுக்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளார்.

ஜென்ரல் சிபுசிஸ்சோ மோயோ (Sibusiso Moyo) வெளிவிவகார அமைச்சராகவும், சிம்பாபே வான்படையின் தளபதி பெரன்ஸ் ஷிரி (Perence Shiri) விவசாய மற்றும் காணி தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, கடந்த 1980ஆம் ஆண்டு முகாபேக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய பெரன்ஸ் ஷிரிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இராணுவ உயர் அதிகாரிகள் அமைச்சராக நியமிக்கப்பட்டமையினை எதிர்கட்சி அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக புதிய ஜனாதிபதி செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் ரொபேட் முகாபே பதவி விலக ஒப்புதல் அளித்த நிலையில் எமர்சன் நன்காக்வ ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

சிம்பாபே இராணுவம் இந்த விடயத்தில் தலையிட்டதனை அடுத்து 37 வருடங்களாக அரசாட்சி செய்த முகாபே பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இது தவிர, முகாபேக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த உயர் இராணுவ அதிகாரிகளின் பதவியில் பெரும் மாற்றம் செய்யப்பட்டன.

Related posts: