அமெரிக்க அதிபர் பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்து பேசினார்!

Thursday, September 8th, 2016

லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11வது கிழக்கு ஆசிய மாநாடு நடக்க இருக்கின்றது. இந்நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார். இன்று மாநாடு தொடங்கி நடந்து வருகின்றது. இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு இடையில் ஆங்சாங் சூகியை சந்தித்து பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிலிப்பைன் அதிபரும் சந்தித்து பேசி உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் ரோட்ரிகோ டுடெர்டே, ஒபாமாவை அவமதிப்பான வார்த்தைகளால் விமர்சித்ததால் ஒபாமா அந்த சந்திப்பை ரத்து செய்தார். இந்த நிலையில் லாவோஸ் நாட்டில், ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒபாமாவும், ரோட்ரிகோ டுடெர்டேவும் சந்தித்து பேசியதாகவும், கடைசியாக இருவரும் தனியாக வெளியேறிதாக தகவல் வெளியாகி உள்ளது.

photo_401433 (1)

Related posts: