1 கார் பந்தயம்: ரோஸ்பெர்க் சம்பியன்!

Tuesday, November 29th, 2016

போமியுலா- − 1 கார் பந்தயத்தில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரோஸ்பெர்க் முதன் முறையான சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2016-ம் ஆண்டுக்கான போமியுலா −- 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் (உதாரணம்: அவுஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்).

இதுவரை 20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெஸ் பென்ஸ் அணியின் ரோஸ்பெர்க் 367 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். அதே அணியின் ஹாமில்டன் 355 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். ரோஸ்பெர்க் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் 21-வது மற்றும் கடைசி கிராண்ட் பிரிக்ஸ் ஆன அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற்றது. இதில் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு 25 புள்ளிகள் வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் வீரருக்கு 18 புள்ளியும், 3-வது இடம் பிடிக்கும் வீரருக்கு 15 புள்ளியும், 4-வது இடம் பெறும் வீரருக்கு 12 புள்ளியும், ஐந்தாவது இடத்தை பிடிக்கும் வீரருக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும்.

ஹாமில்டன் இந்த கிராண்ட் பிரிக்சில் வெற்றி பெற்றாலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டம் வெல்ல முடியாது. அதேவேளையில் ரோஸ்பெர்க் 4-வது இடத்திற்குமேல் வந்தால் ஹாமில்டனுக்கு வாய்ப்பு இருந்தது.

ஆனால், ஹாமில்டன் 55 சுற்றுகளை ஒரு மணி நேரம் 47.213 நிமிடத்தில் கடந்து முதல் இடம் பிடித்தார். அதேவேளையில் ரோஸ்பெர்க் ஒரு மணி நேரம் 46.912 நிமிடத்தில் கடந்து 2-வது இடத்தைப் பிடித்து விட்டார்.

முதல் இடம்பெறும் நபருக்கு 25 புள்ளிகள் வழங்கப்படும் என்பதால், அதனடிப்படையில் ஹாமில்டன் 25 புள்ளிகளுடன் 380 புள்ளிகள் பெற்றார்.

2-வது இடம்பெறும் நபருக்கு 18 புள்ளிகள் வழங்கப்படும் என்பதால், அதனடிப்படையில் ரோஸ்பெர்க் 18 புள்ளிகளுடன் 385 புள்ளிகள் பெற்றார். இதனால் 5 புள்ளிகள் அதிகம் பெற்று ரோஸ்கோர் 2016-ன் போமியுலா- − 1 சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

89col144430259_5063311_28112016_aff_cmy

Related posts: