இரண்டாவது டெஸ்ட் : நியூஸிலாந்து அணி வெற்றி!

Tuesday, August 27th, 2019


இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் திம் சௌத்தி 4 விக்கெட்டுக்களையும் பேல்ட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது. இதன்படி நியூசிலாந்து அணி இலங்கை அணியை விட 183 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

துடுப்பெடுத்தாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் லத்தம் 154 ஓட்டங்களையும் வெட்லின் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும் கிரான்ஹேம் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

Related posts: