வெளிநாட்டு அணியில் விளையாடுவேன் – ஸ்ரீசாந்த்!

Sunday, October 22nd, 2017

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் மீது தடை நீடிப்பதால் வெளிநாட்டு அணிகளில் விளையாட தயார் என அறிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டெல்லி பொலிசார் ஸ்ரீசாந்தை கைது செய்தனர்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்ரீசாந்த் மீது வாழ்நாள் தடைவிதித்தது.இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் ஸ்ரீசாந்த் விடுதலை செய்யப்பட்டாலும் பிசிசிஐ அவர் மீதான தடையை நீக்கவில்லை.

இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்தும், தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் வெளிநாட்டு அணியில் விளையாடத் தயார் என அறிவித்துள்ளார்.

மேலும் தனக்கு ஐசிசி தடைவிதிக்கவில்லை என்றும், பிசிசிஐ நினைத்தால் ரஞ்சி போட்டிக்கான கேரள அணியில் இடம்பிடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் சி.கே.கண்ணா கூறுகையில், ‘ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்ட வீரர் வேறு எந்த நாட்டிலும் விளையாட முடியாது. இது ஐ.சி.சி விதியிலும் உள்ளது. அதனால் ஸ்ரீசாந்த் எங்கும் விளையாட முடியாது எனக் கூறியுள்ளார்.

Related posts: