யூரோ கிண்ணம்: காலிறுதிக்கு முன்னெறியது ஜேர்மனி!

Monday, June 27th, 2016

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் லில்லேவில் நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் 3-0 என சுலோவாக்கியாவை வீழ்த்தி ஜேர்மனி காலிறுதிக்கு முன்னேறியது.

பிரான்சில் யூரோ கிண்ண கால்பந்து தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லில்லே நகரில் நடந்த நாக்-அவுட் சுற்றில் நடப்பு உலக சாம்பியன் ஜேர்மனி, சுலோவாக்கியா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் போவாடங் முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து 43வது நிமிடத்தில் ஜேர்மனியின் மற்றொரு வீரர் கோமஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஜேர்மனி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் டிராக்ஸ்வர் கோல் போட்டார். இது அவர் அடித்த முதல் சர்வதேச கோல் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி வரை முயற்சித்த சுலோவாக்கியா அணியினரால் ஒருகோல் கூட போட முடியவில்லை.

ஆட்ட நேர முடிவில் ஜேர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இத்தாலி – ஸ்பெயின் இடையேயான போட்டியில் வெற்றிப்பெறும் அணியுடன் காலிறுதியில் ஜேர்மனி மோத உள்ளது.

இதைதொடர்ந்து நடந்த மற்றொரு நாக்-அவட்(ரவுண்ட ஆப் 16) சுற்று போட்டியில், பெல்ஜி யம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 german 1

 

Related posts: