நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்தியா டி20 தொடரை கைப்பற்றியுள்ளது!
Friday, January 31st, 2020
ஹாமில்டனில் நடைபெற்ற 3 வது டி20 போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்தியா டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில், ஒரு கட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்று நினைத்தேன். கேன் வில்லியம்சன் (95) துடுப்பாடியதை பார்த்த வகையில், அவருக்காக வருத்தம் அடைகிறேன். கடைசி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். இல்லை என்றால் ஒரு ரன் எடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ரோகித் சர்மாவின் துடுப்பாட்டம் மிகவும் அற்புதம். 2 இன்னிங்சிலும், கடைசி 2 பந்திலும் சிறப்பு. அவர் 1 பந்தை தூக்கினால் பந்து வீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாவார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சைனி, வாஷிங்டன் சுந்தர் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்’’ என்றார்.
Related posts:
|
|
|


