நியூசிலாந்தின் கௌரவத்தை வேறு வீரருக்கு பரிந்துரைத்த பென் ஸ்டோக்ஸ்!

Wednesday, July 24th, 2019

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து அளித்த கௌரவத்தை ஏற்க மறுத்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லிசனை பரிந்துரைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியவர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தாலும், அவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். பென் ஸ்டோக்ஸ் தனது 12வது வயதில் குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு சென்றார். அந்நாட்டுக்காக அவர் தற்போது விளையாடி வருகிறார். ஆனால், அவரது பெற்றோர் நியூசிலாந்துக்கு திரும்பி கிறிஸ்ட் சர்ச்சில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸை நியூசிலாந்து கௌரவிக்க முடிவு செய்தது. அதன்படி இந்த ஆண்டின் சிறந்த நியூசிலாந்து நாட்டவர் என்ற விருதுக்கு ஸ்டோக்ஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவருடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் உட்பட மேலும் சிலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுதொடர்பாக கூறுகையில்,

‘நியூசிலாந்து நாட்டின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இந்த விருதுக்கு என்னை விட தகுதியானவர்கள் நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.

ஏனென்றால், அவர் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர். அவர் நியூசிலாந்து அணியை இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக வழிநடத்தி வந்தார். ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விருதை வில்லியம்சனுக்கு தர பரிந்துரை செய்வோம். என்னுடைய முதல் வாக்கு வில்லியம்சனுக்கு தான்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: