டெஸ்ட் தொடரில் பங்காளதேஷ் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்!  

Friday, October 26th, 2018

சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்காளதேஷ் அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அணி தமது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

குறித்த இந்த தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கலித் அஹ்மது அணியில் இடம்பிடித்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: