இலங்கையுடனான  தொடரினை குறைத்தது மேற்கிந்தியத் தீவுகள்! 

Wednesday, May 23rd, 2018

இலங்கை அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருந்தது.

ஆனால் இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 03 போட்டிகளை இரண்டாக குறைத்து அதற்கு பதிலாக 3 ஒருநாள் போட்டிகளில்விளையாடுவோம் என்ற புதிய அட்டவணையை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையானது இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறுதி டெஸ்ட் போட்டிக்கு பதிலாக 03 ஒருநாள் போட்டிகளில் விளையோடுவோம் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திடம்வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போட்டி குறைப்புக்கான காரணம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: