அயர்லாந்துடனான போட்டிகளுக்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு!

Tuesday, January 1st, 2019

சுற்றுலா அயர்லாந்து ‘A’ அணியுடன் இடம்பெறும் நான்கு நாள் கொண்ட போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிக்கை ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு நாள் போட்டிகள் 02 மற்றும் ஒருநாள் போட்டிகள் 05 ஆகியவற்றுக்கு பங்கேற்க அயர்லாந்து ‘A’ அணியானது கடந்த 30ஆம் திகதி மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு நாள் கொண்ட போட்டியானது ஜனவரி மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற உள்ளதோடு, இரண்டாவது போட்டியானது 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஒருநாள் முதல் போட்டி (19ம் திகதி) மற்றும் இரண்டாவது போட்டி (21ம் திகதி) ஒருநாள் போட்டிகள் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்திலும், மூன்றாவது போட்டி (24ம் திகதி) மற்றும் நான்காவது போட்டி (26ம் திகதி) ஒருநாள் போட்டிகள் எஸ்.எஸ்.சி மைதானத்திலும், இறுதிப் போட்டி (29ம் திகதி) ஒருநாள் போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

நான்கு நாள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை ‘A’அணி –

அஷான் பிரியஞ்சித் (தலைவர்), ஏஞ்சலோ பெரேரா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, லஹிரு மிலந்த, ஹசித போயகொட, பெதும் நிஸ்ஸங்க, சம்மு அஷான், கமிந்து மென்டிஸ், மிலிந்த சிறிவர்த்தன, மனோஜ் சரத்சந்திர, லசித் எம்புல்தெனிய, நிஷான் பீரிஸ், அமில அபோன்சு, நிசல தாரக, சாமிக கருணாரத்ன, ஷெஹான் மதுஷங்க, முஹம்மத் ஷிராஸ் மற்றும் தினேஷ் குணரத்ன

இலங்கை ‘A’ ஒருநாள் அணி –

உபுல் தரங்க (தலைவர்), மிலிந்த சிறிவர்த்தன (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, சந்துன் வீரக்கொடி, சம்மு அஷான், கமிந்து மென்டிஸ், ஷெஹான் ஜெயசூரிய, லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மென்டிஸ், அமில அபோன்சு, ஜீவன் மென்டிஸ், சாமிக கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, ஜெஹான் டேனியல், இசுறு உதான மற்றும் இஷான் ஜயரத்ன.

Related posts: