அகிலவின் பந்துவீச்சுப் பாணியில் மாற்றம்!

Thursday, August 15th, 2019

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று(14) காலியில் ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுகொண்டது.

அகில தனஞ்சய தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடியுள்ளார். போட்டியில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அகில தனஞ்சய கருத்து வெளியிடுகையில்,

”எனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் எனது பந்துவீச்சுப் பாணியில் மிகப் பெரிய மாற்றமொன்றை செய்யவில்லை என அகில தனஞ்சய குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்ட பிறகு விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது” என தெரிவித்தார்.

நான் தற்போது பழைய பந்துவீச்சுப் பாணியை மறந்துவிட்டேன். அதேபோல, புதிய பந்துவீச்சுப் பாணியில் மிகப் பெரிய மாற்றமொன்று ஏற்பட்டுள்ளதாக நான் உணரவில்லை. எனக்கு தேவையான அனைத்து பந்துகளையும் நான் உபயோகித்து வருகிறேன். எனவே தற்போதுள்ள பந்துவீச்சுப் பாணியை நான் மிகவும் விரும்புகிறேன். இதற்கு முன் கையை மேலெழுப்பித் தான் பந்துவீசினேன். தற்போது நான் நெஞ்சுக்கு அருகில் கையை வைத்துக் கொண்டு தான் பந்து வீசுகிறேன். அதுமாத்திரம் தான் நான் செய்த ஒரேயொரு மாற்றம்.

இதேவேளை, லசித் எம்புல்தெனியவுடன் அடிக்கடி பேசிக் கொண்டு பந்துவீசினேன். நிறைய நல்ல விடயங்களைத் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அது எமக்கு சிறந்த பிரதிபலனையும் கொடுத்திருந்தது” என அவர் தெரிவித்தார்.

Related posts: