2050 இல் கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும் சொல்கின்றது ஆய்வு!

Wednesday, January 18th, 2017

சர்வதேச அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மையற்றவை என்பதால் அவை மனித இனத்திற்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன.

1964 ஆம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பாவனை, கடந்த 2014 ஆம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது.எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையை உடனடியாக மாற்றாவிட்டால், 2050 ஆம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆகவே, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் இங்கிலாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்றது.

அதில் உலகின் முன்னணி தொழிற்சாலைகளின் அதிபர்கள் 40 பேர் கலந்துகொண்டனர்.

தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றது. அதை 70 சதவீதமாக உயர்த்த புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Volunteers try to clear a dam which is filled with discarded plastic bottles and other garbage, blocking Vacha Dam, near the town of Krichim on April 25, 2009.    AFP PHOTO / DIMITAR DILKOFF

Related posts: