டோனியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது சரியா?

Sunday, April 23rd, 2017

டோனியை போன்ற அணித்தலைவர் நமக்குக் கிடைப்பது அபூர்வம் என குஜராத் லயன்ஸ் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் தலைவராக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.இதனால் புனே அணித்தலைவராக கடந்த சீசனில் நியமிக்கப்பட்டார். நடப்பு சீசனில் அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்மித்தை தலைவராக்கியது அந்த அணியின் நிர்வாகம். இதற்கு பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. மேலும், இது டோனியை அவமானப்படுத்தும் செயல் என்றும் கண்டிப்பு தெரிவித்தனர். டோனியின் தலைமையின் கீழ் பல வருடங்கள் விளையாடிய சுரேஷ் ரெய்னாவும் டோனிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது,

புனே அணித்தலைவர் பதவியில் இருந்து டோனியை நீக்கியது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டிற்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த நேரமும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபற்றி நான் மட்டுமே கருத்து சொல்லவில்லை. உலகமே சொல்கிறது. டோனியைப் போன்ற தலைவர் நமக்கு இனி கிடைப்பது அபூர்வம் என கூறியுள்ளார்.

Related posts: