எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்!
Thursday, September 26th, 2019
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலையை 250 ரூபாவினால் விலை குறைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நுகர்வோர் சேவை அதிகார சபை இதுவரையில் அதனை செயற்படுத்தவில்லை.
இவ்வாறு விலை குறைப்பதாக வெளியான செய்திகள் காரணமாக எரிவாயு சிலிண்டர் தொகையை வர்த்தகர்கள் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மலையகத்தின் பல நகரங்களில் பல நாட்களாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எப்படியிருப்பினும் தங்களுக்கு எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய வருமான திருத்த சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம்
15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்க...
நாடாளுமன்றம் தவிர்ந்த வேறு யாருடைய பரிந்துரையையும் ஏற்கப் போவதில்லை - கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜன...
|
|
|
பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூரணமடைந்துள்ளது - பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் ...
இலங்கையை மீட்பதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் - சீனத் தூதுவர் தெரிவிப்பு...
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு - பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் ...


