ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது – இராணுவத்தளபதி கடும் எச்சரிக்கை!

Thursday, January 14th, 2021

தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸின் இரண்டாவது அலை பரவிய பின்னர், இதுபோன்ற ‘மோசடி’ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். .

இந்த நாட்டிற்கு வந்து ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்..

கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையத்தில் ஹோட்டல் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளுடன் நடத்திய சிறப்பு கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: