முதல்வரை பதவி நீக்கும் எண்ணம் சம்பந்தனுக்கு இல்லையாம்?

Saturday, June 17th, 2017

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இல்லை என்பது அவரால் விக்னேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தினூடாக அறியக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ”இச் சம்பவங்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமெனில், முதலில் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்’ என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும், வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது’ என்றும் அவர் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்களது விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாக காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்“ என்றும், இது, நீங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.’ எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

அமைச்சர்களான பாலசுப்ரமனியம் டெனீஸ்வரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க எதிர்காலத்தில் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கடந்த 14 ஆம் திகதி சபையில் விடுத்த தமது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் (முதலமைச்சர்) எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.’ என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளதனூடாக, முதலமைச்சரரை பதவிநீக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை அறியக்கூடியதாக உள்ளது.எனினும், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வட மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர்.இதற்கமைய, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக நிமியக்க பெரும்பான்மை கிடைத்துள்ளதாக தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

Related posts: