பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன – ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Sunday, April 28th, 2024

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்தும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அண்மையில் இடம்பெற்றது.

பாதுகாப்பு சவால்கள் பற்றி விவாதிப்பதற்கும், அதற்கு தீர்வு காண்பதற்கும் உலகளாவிய தலைவர்களுக்கு இந்நத கூட்டம் ஒரு தளமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: