பாரபட்சமான அபிவிருத்திக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – சந்துரு

Sunday, May 8th, 2016

பாரபட்சமில்லாத வகையில்  மக்களின் தேவைகள் இனங்காணப்பட்ட அவற்றுக்கான தீர்வுகள் காணப்படவேண்டும். அதற்கு இந்த எழுச்சி மாநாடு வலுச்சேர்க்கமென நாம் திடமாக நம்புகின்றோம்.

கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தை பொறுத்தளவில் பாரபட்சமான அடிப்படையிலேயே மக்களுக்கான உதவித்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இதன் காரணமாக எமது மக்கள் இன்றுவரை பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போதும் ஏனைய அனர்த்தங்களின் போதும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வீடமைப்பத்திட்டம் ,மின்சார வசதி, குடிநீர், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட தேவைப்பாடுகள் கூட பாரபட்சமான நடவடிக்கைகளினால் எமது மக்கள் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையும் காணப்படுகின்றது.

பாரபட்சமான அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமாயின் மன்னார் மாவட்டத்தில் எமது கட்சியின் அரசியல் சார்ந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் அது எமக்கு சாதகமாக அமையும்.

எனவே எமது மக்களுக்கான பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகாணும் பொருட்டு இந்த தேசிய எழுச்சி மாநாட்டினூடாக திடசங்கற்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Related posts: