நாடளாவிய ரீதியில் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானம் – கல்வி அமைச்சு தகவல்!

Monday, October 4th, 2021

நாடளாவிய ரீதியில் சுமார் 3 ஆயிரம் பாடசாலைகளை மீள்திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் சுமார் 200 கும் குறைவான மனவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகள், 100க்கும் குறைவான மனவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3000 பாடசாலைகளின் கற்றல் செயற்படவுகளை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் –

இந்த விடயமானது கல்வி அமைச்சருக்கும், சகல மாகாண ஆளுநர்களுக்கு இடையே நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..      

000

Related posts: