தனியார் கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Saturday, August 15th, 2020

தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை விடவும் அதிக பணம் மீதப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய புதிய அரசாங்கத்தின் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் விவசாய அமைச்சிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட தனியார் கட்டடத்திற்கு பதிலாக விவசாய அமைச்சிற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய மாளிகைக்கு கொண்டு செல்வற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேமுறையில் தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்பட்ட 30 அரச அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் அரச கட்டடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: