உள்ளூராட்சி உறுப்பினர்களின் அதிகரிப்பால் அரசுக்கு மாதம் 12 கோடி ரூபா செலவு!

Friday, December 8th, 2017

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை நான் எதிர்க்கின்றேன். தேர்தலை அவசரப்படுத்தும் நோக்கில் அரச செலவினத்தை அதிகரித்துள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 பேராக அதிகரிக்கப்பட்டமையினால் மாதத்திற்கு 12 கோடிக்கு மேல் அரசுக்கு செலவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தயா சிறி ஜயசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

முன்னர் 4 ஆயிரத்து 484 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் போது ஒரு உறுப்பினருக்கும் 3 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஒரு உறுப்பினருக்கு 15 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டியுள்ளது. பசில் ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தின்படி 6 ஆயிரத்து 619 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதற்கு சுமார் 10 கோடி ரூபா செலவிடும் நிலைமை ஏற்பட்டிருக்கும். ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் பிரகாரம் ஒரு மாதத்திற்கு 12 கோடிக்கு மேல் செலவிடவேண்டியுள்ளது. இந்த பணத்திற்கு எங்கு போவது ௲ என்றார்.

Related posts: