இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்த இத்தாலி !

Monday, May 31st, 2021

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.

இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றையதினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி.1.617 என்ற திரிபடைந்த கொரோனா வைரஸ் காரணமாக தெற்காசிய நாடுகள் பாரிய பேரழிவை சந்தித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related posts:

சீரற்றகால நிலையால் தேசியவருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகபொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரிகள் குளறுபடிகளால் ஆசிரிய நியமனம் இழுபறிப்படுகிறது - விரைவில் வழங்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை!
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!