அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!

Saturday, October 20th, 2018

முதல் முறையாக இலங்கையின் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173 ரூபாயை நெருங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றையதினம் வெளியிட்ட நாணய மாற்று வீதத்தற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.99 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 169.10 ரூபாயாக அதிகரித்திருந்தது.

இதன்பிரகாரம் நேற்றுமுன்தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.72 ரூபாயாக பதிவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலர் வலுவுடைந்தமையினால் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வியூகத்தின் பலவீனத் தன்மையே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து 173 ரூபாவினையும் கடந்து செல்கிறது என்றும் இது இந்த வருட இறுதிக்குள் 200 ரூபாவினை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: