பூசணி, தர்ப்பூசணிகளின் உற்பத்தி வடமராட்சி கிழக்கில் மிகக்குறைவு!

Friday, August 3rd, 2018

வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பூசணி, தர்ப்பூசணிகளின் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு அதனை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒவ்வொரு இடமும் ஏதோ ஒன்றுக்கு புகழ் பெற்ற இடமாக காணப்படுகின்றது. மட்டுவில் கத்தரிக்காய்க்கும், நீர்வேலி வாழைப்பழத்திற்கும் முக்கிய இடம்பெறுகின்றன.

அதேபோன்று வடமராட்சி கிழக்கின் நாகர் கோவில் மற்றும் அம்பன் பகுதியில் பூசணி இனங்கள் அதிகளவாக ஆரம்பத்தில் பயிரிடப்பட்டன. ஆனால் அவற்றின் உற்பத்தி தற்போது குறைவடைந்து வருகின்றது.

பூசணிக்கான விலை சந்தையில் மிககுறைவாக காணப்படுவதாலும் அது கொடியாக படர்ந்து வளரும் இடம் உரிய முறையில் பாதுகாக்கப்படாமையினாலும் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

Related posts: