“பிங்கர் பிரின்ட்” இயந்திரத்துக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்!

Wednesday, November 22nd, 2017

பாடசாலைகளில் கையடையாள இயந்திரத்துக்கு எதிராக யாழ்ப்பாணப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன.

இந்த ஆண்டு முதல் வன்னிப் பாடசாலைகள் சில தவிர வடக்கு மாகாணத்தின் பல பகுதியிலுள்ள பாடசாலைகளில் கையடையாள இயந்திரம் நடைமுறைக்கு வருகின்றது. இதனை நிறுத்தச் சொல்லியே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்தத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டதாவது;

மீளமுடியாத பாதையில் வடக்குமாகாணம், எங்கள் பிள்ளைகளின் எதிர் காலம் எங்கள் கைகளில், ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள், வடக்கு மாகாணம் கல்வியில் 9 ஆவது இடத்தில் இருப்பதற்கு யார் காரணம், மீண்டும் மீண்டும் பின் தங்கி வைப்பதற்கு கையடையாள இயந்திரம், கையடையாள இயந்திரத்தினால் ஆசிரியர்களுக்கு தேவையற்ற லீவு, மன உளைச்சல் ஏற்படுகின்றது.

கையடையாள இயந்திரத்திற்கு வேலை செய்தால் போதும் என அதிகாரிகள் நினைக்கின்றனர்.

எனவே அடுத்த ஆண்டில் தமிழ், ஆங்கில, சமூக விஞ்ஞான அழகியல் போட்டிகள் போன்ற மேலதிக செயற்பாடுகளை நிறுத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப்பிரசுரங்கள் வெளிமாவட்டத்திற்கு பணிபுரியும் அரச உத்தியோகஸ்தர் பேருந்துகளிலும் வலிகாமம், மானிப்பாய் பகுதி, நெல்லியடி மத்திய கல்லூரி வீதி மற்றும் தென்மராட்சிப் பகுதியிலும் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

Related posts: