தீவிரமடைந்துள்ளது மதமாற்றம்! யாழில் இந்திய பிரமுகர்!

Wednesday, November 1st, 2017

யாழ்ப்பாணத்தில் மதமாற்றம் நடைபெறுவதற்கு இந்தியாவின் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் ஈழத்திலுள்ள புனிதத்தலங்களை பார்வையிட்டு, அவற்றை வழிபடுவதற்கே தாம் இலங்கை வந்திருப்பதாக ராம.ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது வடக்கில் தீவிரமடையும் மதமாற்றம் மற்றும் பொளத்த மயமாக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில் இந்து மக்கள் கூடுதலானோர் கடந்த காலங்களில் வேறு மதங்களுக்கு மாறியிருந்தனர். இவர்களை நான் சந்தித்து கலந்துரையாடியிருந்தேன்.அப்போது அவர்கள் கூறிய ஒரே விடயம் “ஏழ்மை”. வறுமை நிலை காணமாகவே தாம் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறியதாக அவர்கள் தெரிவித்தார்கள். அனால் அக்கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கின்றேன்.

பிற மதத்தவர்கள் வாரத்திற்கு ஒரு தடவையேனும் சந்தித்து கலந்துரையாடுகின்றனர். ஆனால் இந்துக்கள் அவ்வாறு இல்லை.மேலும், ஈழத்தில் நடைபெறும் பௌத்த மயமாக்கலை நாம் எதிர்க்கின்றோம். இது தொடர்பில் மத்திய அரசுடன் கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related posts: