கணித விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களது எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை! – வடமபகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன்

Friday, March 25th, 2016

கணித, விஞ்­ஞான பிரி­வு­களில் கற்கும் மாண­வர்­க­ளது எண்­ணிக்­கையை 40 வீத­மாக அதிக­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள், விளை­யாட்­டுத்­துறை, இளைஞர் விவ­கார அமைச்சின் செய­லாளர் இ.இர­வீந்­திரன் தெரி­வித்­துள்ளார்

வலி­காமம் கல்வி வல­யத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா­வா­னது வலி­காமம் வலயக் கல்­விப்­ப­ணிப்­பாளர் எஸ்.சந்­தி­ர­ராஜா தலை­மையில் அண்­மையில் இடம்­பெற்ற போது அந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது

தரம் 6– ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரை­யான வகுப்­பு­க­ளுக்கு கற்­பிப்­ப­தற்­கான கணித,-விஞ்­ஞான, ஆங்­கில பாட ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­குறை காணப்­படு­கின்­றது. விண்ணப்­பங்கள் கோரப்­பட்ட போதிலும் பட்­ட­தா­ரிகள் 40தொடக்கம் -50 பேர் வரையிலாவது வரு­வார்­களா எனும் சந்­தேகம் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வ­கையில் கணித, -விஞ்­ஞான துறை­யினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு திட்­டங்கள் மேற்கொள்ளப்படவுள்­ளன

இதே­வேளை அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள் உங்­க­ளது பிள்­ளை­க­ளினை சரி­யாக வழிப்படுத்துங்கள். ஆசி­ரி­யர்கள் வகுப்­ப­றைக்கு செல்­லா­மை­யினால் தான் பல்­வேறு பிரச்­சி­னைகள் உரு­வா­கின்­றன. பாட­சா­லை­களில் உள்ள மேல­திக ஆசி­ரியர் பிரச்­சி­னை­க­ளினை தீர்ப்­பது பெரும் பிரச்­சி­னை­யாக உள்­ளது

வல­யங்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும். அந்த வகையில் வலி­காமம் கல்வி வல­யத்­திற்கு பௌதீக வளத்­தினை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்­ட டம் அமைத்து கொடுக்­கப்­பட்­டுள்­ளது என வும் தெரி­வித்தார்

சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட வட­மா­காண கல்­விப்­ப­ணிப்­பாளர் செ.உத­ய­குமார் உரை­யாற்­றுகையில் புதி­ய­கட்­டட திறப்­பு­வி­ழாவின் மூலம் வலி­காமம் வல­யத்தின் பௌதீக வளத்தின் ஒரு­ப­குதி பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது. வட­மா­கா­ணத்தில் அதிக மாண வர்­க­ளினை கொண்ட வல­ய­மாக இவ்­வ­லயம் காணப்­டு­கின்­றது. வட­மா­கா­ணத்தின் பெறு­பேற்­றினை நிர்­ண­யிக்­கின்ற வல­ய­மா­கவும் இது காணப்படுகின்றது

இன்று பல நிலங்கள் விடுவிக்கப்பட்டு அவ்விடங்களில் பாடசாலைகள் மீளவும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் கல்வி நடவடிக்கைகள் மேலும் விருத்தியடையும் எனத் தெரிவித்தார்.

Related posts: