எச்சரிக்கை : தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரிப்பு!

Thursday, May 31st, 2018

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புத்தளம், குருநாகல், கம்பஹா, காலி, களுத்துறைகேகாலை, மாத்தறை, கொழும்பு உட்பட 20 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களால் ஒரு இலட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 79ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காலநிலை சீரடைந்ததைத் தொடர்ந்து வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் நுளம்புகள் பெருகி டெங்கு, காய்ச்சல் போன்ற நோய்களை பரவக்கூடிய அபாயமும்,எலிக்காய்ச்சல், வயிற்றோட்டம,; ஏற்புவலி ஆகிய நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக மருத்துவ நிபுணர்களும், சுகாதாரத்துறையினரும் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெள்ளம் ஏற்பட்ட பிரதேசங்களில் வெள்ள நீர் ஊடாக எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட சுகாதாரத்துறையினர் எலியின் சிறுநீர் வெள்ளநீரில் கலப்பதால் இந் நோய் பரவுவதற்கான அறிகுறிகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

வீட்டு கிணறுகளில் வெள்ளநீர் கலந்துள்ளதால் அமீபா, வயிற்றுளைவு போன்ற நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே நீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை2018; ஜனவரி முதல் மே மாதம் இறுதி காலப்பகுதி வரை 20 ஆயிரத்து 443 பேர் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள்; இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts: