இருதய அறுவைச் சிகிச்சையில் உயிரிழந்தோர் விவகாரம் : சந்தேகிக்கும் மருந்து வெளிநாட்டு பரிசோதனைக்கு!

Sunday, December 4th, 2016

இருதய அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உயிரிழந்த 4 நோயாளர்கள் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் மஹிபாலவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி 6 நோயாளர்கள் இருதய அருவைச் சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 4 பேர் உயிழந்தனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சரால் விசாரணை செய்ய 3 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் லக்ஷ்மி சீ சோமதுங்க, ஆய்வக சேவை இயக்குனர் மருத்துவர் கமல் ஜயசிங்க மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோஹன சில்வா ஆகியோர் இந்த குழுவில் அடங்கியிருந்தனர்.

குறித்து அறிக்கை நேற்றுமுன்தினம்(02) மாலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கை ஊடாக இருதய அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வகை மருந்தில் ஏற்பட்ட ஒவ்வாமையே இந்த மரணங்களுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அந்த மருந்து வகையை தேவை ஏற்பட்டால் வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கு அந்த அறிக்கையின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை தயாரிக்கும் போது அறுவைச் சிகிச்சை அறையில் உள்ள கருவிகள் கடுமையாக பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளர்களுக்கு வழங்கியுள்ள மருந்துகள் தொடர்பாகவும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மற்றும் தாதிகளிடமும் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

palithamahipala

Related posts: