பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு பயிற்சிகளுடன் வங்கிக் கடன்கடனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 12th, 2021

பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு வங்கிக் கடன்களும் பயிற்சிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்வமுள்ளவர்கள் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவித்தார்.

மேலும், யாழ் கடல் நீரேரி, தீவக பிரதேசத்தினை அண்டிய கடல் பிரதேசத்தில் காணப்படும் வளமான சூழலை சரியாகப் பிரதேச மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். கடல் நீரேரி பிரதேசத்தில் அண்மித்த கடல் பிரதேசத்தில் இறால் மற்றும் கடலட்டைப் பண்ணை அமைத்தல் மற்றும் கொடுவாய் போன்ற மீன்களை வளர்த்தல் தொடர்பாக இன்று(11.05.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

000

Related posts: