நல்லூர் பிரதேச சபையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Saturday, July 25th, 2020

நல்லூர் பிரதேச சபையினால் கொறோனாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வளாகத்தில் வாழைப்பழ விற்பனையிலீடுபட்டுவருகின்ற வியாபாரிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி அமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்த நிலையில் இன்று குறித்த விவகாரம் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பில், நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து  நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளருக்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts:

இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எ...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை - கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை...