தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 26th, 2019

2017இல் இரு வருட கால அவகாசத்திற்கு பின் அப்போதும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர், இலங்கையானது ரோம் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும், சர்வதேச நியாயதிக்கத்தை கோர வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இப்போதும் 2019இலும், அதே விடயத்தைத் தான் பரிந்துரைத்துள்ளார். 2021இலும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு இதைத் தவிர வேறு என்ன சொல்லப் போகுது” என கேள்வி எழுப்புகின்ற தமிழ் சமூகமானது, இன்றளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலி வேடகங்களை அம்பலப்படுத்தியுள்ளமையானது பாதிக்கப்பட்டுள்ள எமது தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள முதலாவது வெற்றி என்றே கூற வேண்டும். அதேவேளை, அத்தகைய மாற்றுக் கருத்துக்களை பிரசுரித்திருந்த எமது தமிழ் ஊடகங்களும் பாராட்டப்பட வேண்டியவையே ஆகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதேநேரம், வடக்கு ஆளுநர் ஜெனீவா செல்கின்ற வேளையில், ‘வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர் என்றும், தமிழருக்காக அவர் ஜெனீவா செல்வதா? என்றும் அவருக்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? எனக் கேள்வி எழுப்புகின்ற எமது மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுக்க தற்போது தயாராகிவிட்டார்கள் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு...
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு - பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!