கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 4th, 2021

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா 3 நாட்கள் கிளிநொச்சியில் தொடர்ச்சியாகத் தங்கியிருந்து பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களது குறைதீர்த்துள்ளார்.

கிளிநொச்சி சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுற்றுலா விடுதியிலும், அருகில் அமைந்துள்ள மாவட்ட திறன்விருத்தி பயிற்சி மைய மண்டபத்திலும் பொதுமக்கள்  மற்றுமு; பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் முயற்சிகள், கல்வி, நீர்வழங்கல், காணிப் பிரச்சினைகள், முச்சக்கரவண்டி ஊர்த்திச் சங்கத்தின் பிரச்சினைகள் என பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.

அதேநேரம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேசசபை செயலாளர் உள்ளிட்டவர்களுடன் மக்களின் சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுடன் இணைந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கையின் 15 கடற்றொழில் மாவட்டங்களிலும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கவேண்டிய பொறுப்பு மிகுந்த சூழ்நிலையிலும், மாவட்ட இணைத்தலைவர் என்ற ரீதியில் இதுபோல் இனிவரும் காலங்களில் அடிக்கடி கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியிருந்து மக்களுடைய பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீரவகளை வழங்கவிருப்பதாக மாவட்டச் செயலக சந்திப்புக்களின் இறுதியில் ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது - ச...
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...

தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...