கலை, கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றித்து செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, July 9th, 2017

எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அவற்றை கட்டியெழுப்பவது தொடர்பில் துறைசார்ந்த தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (9) நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒரு இனத்தின் அடையாளம் என்பது மொழியில் மட்டும் தங்கியிருக்காது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதிலும் தங்கியிருக்கின்றது. அந்தவகையில் கடந்தகாலங்களில் எத்தனையோ இடர்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் நாம் முகம்கொடுத்து எமது மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் இவ்வாறான எமது விழுமியங்களை பாதுகாக்கும் அதேவேளை அவற்றை வளர்த்தெடுப்பதிலும் முன்னேற்றுவதிலும் தமது பாரிய பொறுப்புக்களை உணர்ந்தவர்களாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக விரோத செயற்பாடுகள் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட சமூக சீரழிவுகளிலிருந்து இன்றுள்ள இளைய சமூகத்தினரையும் எதிர்கால சமூகத்தினரையும் பாதுகாக்கும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவேண்டும்.  இதில் யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரக்கம் பாரிய பங்களிப்பு உண்டு என்பதுடன் அவர்களும் இதை உணர்ந்த செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வை. தவநாதன் உடனிருந்தார்.

Related posts:

வடக்கின் மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் ...
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்ப...
கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...

கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு ...
மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம...
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...