நெஞ்சத்தில் வஞ்சம் வைத்து  வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா! – நக்கீரா

Thursday, August 18th, 2016


மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருமுறை நடிகவேள் எம். ஆர். ராதாவால் சுடப்பட்டார். மயிரிழையில் உயிர் தப்பிய எம. ஜி. ஆருக்கு தொண்டையில் காயம்.

ஏன் சுட்டாய்?…  எம். ஆர். ராதாவிடம் கேட்ட போது கையில் தடி இருந்தால் அடித்திருப்பேன். கல் இருந்தால் எறிந்திருப்பேன். கையில் துப்பாக்கி மட்டுமே இருந்தது. அதுதான் சுட்டன்….இவ்வாறு அன்று பதிலளித்திருந்தார் எம். ஆர். ராதா.

அண்மையில் வவுனியாவில் நடந்த கூட்டமொன்றில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஐயா மீதுஅதே கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தனது கையில் இருந்த ஒலிவாங்கியால் எறிந்து தாக்குதல் நடத்தினார். அந்த உறுப்பினர் கையில் அந்த நேரம் துப்பாக்கி இருந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும்.?? இப்படி பலரும் அருவருப்பாக பேசுகிறார்கள்.

முன்னர் ஒருமுறை யாழில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது தண்ணீர் போத்தல்களை எறிந்து தாக்குதல் நடத்தினார்கள். ஆனாலும். பதிலுக்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் தம்வசம் இருந்த தண்ணீர் போத்தல்களை வீசியதோடு அந்த சச்சரவு முடிந்து விட்டது.

ஈ,பி .டி பி உறுப்பினர்களை பயங்கரமானவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் அவதூறு பரப்பி வருகிறதுதமிழ் தேசிய கூட்டமைப்பு. அவர்கள் சொல்வது போல் ஈ.பி.டிபி. உறுப்பினர்கள் பயங்கரவாதிகளாக இருந்திருந்தால், தமது தலைவர்களை கொன்றவர்கள் குறித்து மூச்சு கூட விடுவதற்கு துணிச்சல் இல்லாத கூட்டமைப்பினருக்கு,. நியாயங்களை மட்டும் எடுத்துரைத்த ஈ.பி.டி.பி  உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தும்  துணிச்சல் எப்படி வந்தது?.

தமிழ் சினிமாக்களில் வில்லன்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் நிஜ வாழ்வில் நல்லவர்களாகவே இருப்பார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயாரிப்பில் வெளியாகும் திகில் திரைப்படங்களிலும் கூட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் வில்லன்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்  இதுவே உண்மை.

தூற்றுவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் அதன் மூலம் தமது அருவருப்பான அரசியலை நடத்துவதற்கும் ஈ.பி.டி.பியின் பெயரை மிக இலகுவாக பயன்படுத்தி வருகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

தமிழர்களின் உரிமைப்போராட்ட போராட்ட வரலாற்றில் தமிழரை தமிழரே கொல்லும் வன்முறைக்கு வித்திட்டவர்கள், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏக ஆதிக்கம் செலுத்திவரும் அதே தமிழரசுக்கட்சியினரே என்பது வரலாறு.

கூட்டத்தைக் கூட்டி கூட நின்று பிதற்றுவதைத் தவிரவேறு எதனையும் மக்களுக்காகச் சாதிக்கத் திராணியற்றவர்கள் இந்தத் தழிழ் அரசுக் கட்சியினர். எவராவது எதையும் தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்து விட்டால் அவர்களைத் துரோகிகள் ஆக்கும் கலையில் கைதேந்தவர்கள் இவர்கள்.

ஆகையால்தான் மாற்றுக்கருத்து கொண்டோருக்குஇயற்கை மரணம் இல்லை என்று அன்று தமிழரசு கட்சிமேடை தோறும் முழங்கியது. இயற்கை மரணம் இல்லை என்றால் அதன் அர்த்தம் மரண தண்டனைதான் என்பது எல்லோருக்கும் புரிந்ததே.

இதன் மூலம் தமது அரசியல் போட்டியாளர்கள் யார் என்பதை இளைஞர்களுக்கு இனங்காட்டியது தமிழரசுக்கட்சி.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பிடப்போன துரையப்பாவை சுட்டுவிட்டு ஓடி வந்தவர்களை வரவேற்று தமிழ் நாட்டுக்குத் தப்பியோட வைத்து, காப்பாற்றி மகிழ்ந்தவர்கள் இந்தத் தமிழரசுக்கட்சிக் கட்சியினர்.

பின்னாளில் இவர்களால் காப்பாற்றப்பட்டவர்களாலேயே இவர்கள் ஒழிக்கப்பட்டது இவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வரலாற்று அவலம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையின் துயரம். முன்பு ஒரு முறை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடந்த தமிழரசுகட்சியின் கூட்டமொன்றில் மாற்றுக் கருத்துக் கொண்ட இடதுசாரிய இளைஞர்கள் சிலர் கேள்விகளைக் கேட்டனர்.

தம்பிமார்களின் கேள்விகளுக்கு மேடைக்கு பின்னால் நிற்கும் எமது தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள் என்றார் மேடையில் பேசிக்கொண்டிருந்த பிரமுகர் ஒருவர். பிரமுகரின் பேச்சை நம்பி கேள்வி கேட்ட இளைஞர்கள் மேடைக்குப் பின்புறம் சென்றனர்.

அங்கு காத்திருந்த தமிரரசுக்கட்சியின் தொண்டர்கள் கேள்வி கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,.. அவர்களை நையப்புடைத்து கூட்டத்தில் இருந்து பின் புற வாசல் வழியாக வெளியேற்றி,… தமது வன்முறை ஆட்டத்தை நடத்திவைத்த சம்பவம் பலரும் அறிந்ததே. எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் மீது, வன்முறை!

இதுதான் இவர்களது ஜனநாயகம்!!!! தமிழரின் போராட்ட வரலாற்றில் கேள்வி கேட்பவன் மீது வன்முறை ஆட்டத்தைத் தொடக்கி வைத்தர்வகளே இந்த தமிழரசுக்கட்சியினர்தான்…

அன்று இவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்திருந்தால், தம்மை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்களுக்கு துப்பாக்கிகளே பதில் கூறியிருக்கும் இன்றும் அதுதான் நடக்கிறது. பழக்க தோசம் அவர்களை விடவில்லை… ஈபி.டிபி மீது தண்ணீர்ப்போத்தில் எறிகிறார்கள். சம்பந்தன் ஐயா மீது ஒலிவாங்கியால் எறிகிறார்கள்.

தூ!… வெட்கம் கெட்டவர்களே!…

ஜனநாயகம், மனித உரிமை, என்கின்றீர்களே!….

இந்த வார்த்தைகளை உச்சரிக்க  தகுதியுள்ளவர்களா நீங்கள்?….

இப்படிக்கு,…

நக்கீரா!..

நன்றி – நக்கீரா முகநூல்.

18

 

Related posts: