ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 14

Tuesday, April 19th, 2016

ஒரு முறை ஈரோஸ் அமைப்பின் ஈழ மாணவர் பொது மன்றம் லண்டனில்  ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில்ரொபர்ட் முக்காபேயின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாற்றியபோது –

ஈரோஸ் இயக்கத்தின் சில உறுப்பினர்களுக்கு அயர்லாந்து ஐக்கிய இராணுவம் (ஐ.ஆர்.ஏ.) கெரில்லாப் பயிற்சி வழங்குவது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது! ஈரோஸ் இயக்கத்தின் தலைவர்  இரத்தினசபாபதி அவர்கள் இலண்டனிலிருந்து  செயற்பட்ட நிலையில் அதன் இலங்கை செயற்பாடுகளை கவனித்தவர் – தோழரின் பெரிய தந்தையாரான  கே. சி. நித்தியானந்தா அவர்கள்!

இந்தக் காலகட்டத்தில்தான்ஈரோஸ் இயக்க உறுப்பினர்களுக்கு  பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி  வழங்குவது பற்றி  அதன் இலண்டன் கிளையில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டது!

ஆயுதமேந்திப் போராடஈரோஸ் அமைப்பு தீர்மானித்திருந்ததால் – இப் பயிற்சிகளின் தேவை அந்த அமைப்பிற்கு அத்தியவசியமாக இருந்தது! 1977ன் இறுதியில் ஈரோஸ் இயக்கத்திற்கு பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி பெறக்கூடிய
வாய்ப்பு கிட்டியிருந்தது!

இந்த வாய்ப்பினை அப்போதைய  புலிகள் இயக்கத்திற்கு  ஈரோஸ் இயக்கம் கொடுத்தது! இதன் பயனாக புலிகள் இயக்கத்தில் மூவர் தெரிவு செய்யப்பட்டனர் –

வேலுப்பிள்ளை பிரபாகரன்,உமா மகேஸ்வரன் ஆகியோர் இலங்கையிலிருந்தும்  விச்சுவேஸ்வரன் லண்டனிலிருந்தும்தெரிவு செய்யப்பட்டு பின்னர் –

வேலுப்பிள்ளை பிரபாகரன் தவிர்ந்த ஏனைய இருவரும் பயிற்சிக்காகச் சென்றனர்! இது நடந்து சில நாட்களில் ஈரோஸ் இயக்கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிலவிய கருத்து  முரண்பாடுகள் மற்றும் கொடுக்கல்  வாங்கல்களில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து வழங்க ஈரோஸ் இயக்கம் விடவில்லை!

இதன் காரணமாக இப் பயிற்சி குறுகிய காலத்திற்குள் இடை நிறுத்தப்பட்டது!

இந்த நிலையில் – 1978ம் வருட நடுப் பகுதியிலிருந்து ஆறு மாத காலக் கட்டத்திற்குள் பாலஸ்தீன ஆயுத மற்றும் போர்ப்  பயிற்சிகளைப் பெறுவதற்கும்,அதற்கென ஈரோஸ் அமைப்பிலிருந்து மூவரைத் தெரிவு செய்வதற்கும் ஈரோஸ் இயக்கத்தில் தீர்மானிக்கப்பட்டது!

இந்தப் பயிற்சியில்தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என
தோழரின் பெரிய தந்தைக்கு விருப்பம் இருந்தது!

என்றாலும் -‘உயர்படிப்பு முடித்த பிறகுதான்போராட்ட வாழ்க்கை’ என்றதோழரின் தந்தையாரின் எண்ணமும்
இதற்குத் தடையாக இருந்தது!

(தொடரும்)

Related posts: