ஈழப் போராட்டத்தில் மனிதாபிமான அடையாளம் –  தோழர் டக்ளஸ் தேவானந்தா – 15

Saturday, April 23rd, 2016

1978ம் வருடம் நடுப் பகுதியிலிருந்து பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி பெற ஈரோஸ் இயக்கத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டனர்!

தோழர் டக்ளஸ் தேவானந்தா, அரவிந்தன் என்றழைக்கப்படும் பிரான்ஸிஸ,;  அருளர் என்றழைக்கப்படும் அருள் பிரகாசம் ஆகியோரே அம் மூவராவர்!

பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சிப் பெற ஈரோஸ் இயக்கம் தீர்மானித்திருந்த வேளை – பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன!

லெபனான் நாட்டினுள்ளும் பல்வேறு குழுக்களிடையே  உள்நாட்டுப் போர் ஏற்பட்டிருந்தன!

இவ்வாறான நிலையில் – அவ்வாறானதொரு நாட்டில் கெரில்லா யுத்தப் பயிற்சி பெறுவது அவதானமிக்க செயற்பாடாகும்!

ஆயுதப் பயிற்சி வழங்க முன்வந்தாலும் உயிர்களுக்கு எவ்வித பொறுப்புக்களையும் ஏற்க பாலஸ்தீனம் கடமைப்பட்டிருக்கவில்லை!

இவ்வாறான ஒரு நிலையில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பாலஸ்தீன ஆயுதப் பயிற்சிக்கு அனுப்பஅவரது குடும்பத்தார் முன்வருவது சாத்தியமற்ற விடயம்!

தான் பாலஸ்தீன ஆயுதப் பயிற்சி பெற சென்ற கால கட்டத்தை நினைவுபடுத்தும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் –

‘நான் இராணுவப் பயிற்சி பெறுவதில் எனது தந்தைக்கு விருப்பம் இருந்தது. இருப்பினும் அவரது எதிர்பார்ப்பு நான் முதலில் உயர்கல்வியை முடிக்க வேண்டும் என்பதே!

பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற செல்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்!

வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெறுவதென்பது அந்தக் காலகட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்களது கனவாக இருந்தது!

அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்!

எனது பெரிய தந்தையார்  இதற்கு மிகவும் தூண்டுதலாக இருந்தார்!

எனது தாயார் நான் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார் –
அவர் இருந்திருந்தால் சிலவேளை என்னை அனுப்பியிருக்க மாட்டார்!’

(தொடரும்)

 

Related posts: