85 இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு – ஜனாதிபதி!

Saturday, December 2nd, 2017

85 இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றதுஇதில் உரையாற்றியபோதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அளவில் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts:


உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை - பொலிஸ் ஊடக...
ஆசிரியர் - அதிபர்களுக்குரிய 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது - கல்வி அமைச்சி...
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் - பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இடைய...