80 க்கும் மேற்பட்ட கற்கைகளுக்கு 30,141 மாணவர்கள் தெரிவு !

Monday, July 30th, 2018

2017 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப் பட்டுள்ளது.

இதன்படி 14 பல்கலைக்கழகங்களில் 80 க்கும் மேற்பட்ட கற்கை நெறிகளுக்கென இம்முறை 30,141 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 2,53,357 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன் அவர்களில் 163,160 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இவர்களில் 78,894 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்திருந்ததுடன் அவர்களில் 30,141 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தோற்றியவர்களில் 6796 பேரும், பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தோற்றியவர்களில் 5723 பேரும் வர்த்தக பிரிவில் தோற்றியவர்களில் 6119 பேரும் கலைப்பிரிவில் தோற்றியவர்களில் 8874 பேரும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் தோற்றியவர்களில் 1307 பேரும் உயிரியல் தொழில்நுட்பவியல் பிரிவில் தோற்றியவர்களில் 955 பேரும் பொது பிரவில் தோற்றியவர்களில் 367 பேரும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: